Mayu / 2026 மே 11 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நிகழ்வுகள், இன்று (மே 12) யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாகத் தொடங்கின.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில், வலி-தெற்கு பிரதேச சபைக்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாகப் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் கலந்துகொண்டு பொதுச்சுடரினை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஏனைய பிரதிநிதிகளும் பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும், ஒருவேளை கஞ்சிகூட கிடைக்காமல் அவர்கள் பட்டினி கிடந்த நிலையையும் நினைவுகூரும் முகமாக, அங்கு வருகை தந்திருந்த மக்களுக்கு 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' பரிமாறப்பட்டது. இது போராட்டக் காலத்தின் வலியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு குறியீடாக அமைந்தது.
9 hours ago
9 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
16 May 2026
16 May 2026