Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளக வீதியில் சனிக்கிழமை(15) மாலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு உள்ளக வீதிகளை இணைக்கின்ற நாற்சந்தியில் எதிரும் புதிருமாக வந்த பிள்ளையானின் வாகனத்தொடரணியில் பங்கேற்ற கெப் ரக வாகனமும் மறுமுனையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி இவ்விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு விபத்திற்குள்ளான கெப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். R
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025