ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 19 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அநாமதேயமாகக் காணப்பட்ட பொதியொன்றிலிருந்து சுமார் மூன்றரைக் கிலோ கிராம் கேரளக் கஞ்சாவும் கஞ்சாவை நிறுத்து விற்பதற்குப் பயன்படுத்தும் இலத்திரனியல் தராசும் இன்று (19) காலை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், தைக்காவீதியை அண்டியுள்ள வீட்டு மதிலோரம் இந்த அநாமதேயப் பொதி காணப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையிலான பொலிஸ் அணி ஸ்தலத்துக்கு விரைந்து சென்று, இந்தக் கஞ்சாப் பொதியை மீட்டனர்.
கைப்பற்றப்பட்ட இந்தக் கஞ்சா, உள்ளூர் சந்தைப் பெறுமதியில் ரூபாய் 10 இலட்சம் பெறுமதியானது எனப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
19 minute ago
24 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
41 minute ago
47 minute ago