2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறைக்கு மிக விரைவில் தீர்வு

Freelancer   / 2023 மார்ச் 28 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, நேற்று ( 27)  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்டத்தில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்வி  அலுவலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜிவரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தமது கருத்துகளையும், பிரச்சினைகளையும் முன்வைத்தனர்.

இதன்போது  மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில்  மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாதகமாக காணப்படும்  கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. 

அத்துடன், கல்வித்துறை சார் திணைக்கள அதிகாரிகளிடம் விடயம் தொடர்பாக  கேட்டறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், கல்வி அமைச்சின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கான தீர்வை மிக விரைவாக பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .