2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

வாவியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

Editorial   / 2023 மார்ச் 26 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண்ணொருவர்  சடலமாக இன்று (26) ஞாயிற்றுக்கிழமை   மீட்டுள்ளதாக மட்டக்களப்பு  தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று நீரில் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடுத்து. சம்பவ இடத்துக்குச்  சென்று ​பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(வைப்பக படம்)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .