Princiya Dixci / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சஹரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக, சந்தேகநபர்களை நீதிமன்றுக்கு அழைத்துவர முடியாததையடுத்து, இது தொடர்பான வழக்கு, காணொளி மூலமாக இன்று (02) நடைபெற்றது.
21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்றும் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர்.
அதேவேளை, சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 64 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த இரு வெவ்வேறு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் பொலநறுவை, அநுராதபுரம், கேகாலை மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago