2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மனநலம் குன்றிய இளைஞனின் சடலம் மீட்பு

Freelancer   / 2022 நவம்பர் 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி       

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் உள்ள நீர் நிலையிலிருந்து நேற்று இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை அக்கிராமத்திலுள்ள நீர் நிலையில் சடலம் ஒன்று தென்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் குன்றியவர் எனவும், பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகசன் சூரியகுமார் என அடையாளர் காணப்பட்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X