2023 செப்டெம்பர் 29, வெள்ளிக்கிழமை

சாரதா இல்லம் சாம்பியன்

Freelancer   / 2023 மார்ச் 10 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில்  சாரதா இல்லம் 693 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தட்டிக்கொண்டதுடன் சம்பியன் கிண்ணத்தையும் சுவீகரித்துக்கொண்டது.

கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி.நவகீதா தர்மசீலன் தலைமையில்  கடந்த சனிக்கிழமை (4) நடைபெற்றது.

இவ் விளையாட்டுப் போட்டியில், ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர்  சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜூம், பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமாரும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ஹரிகரராஜ், மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.ரவிச்சந்திரா, உடற்கல்வி பாட ஆசிரிய ஆலோசகர் கே.ரவி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது பல திறனாய்வு விளையாட்டுக்கள் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மூன்று இல்லங்களுக்கிடையில்  நடாத்தப்பட்டது. இத்திறனாய்வு விளையாட்டு போட்டியில்  சாரதா இல்லம் 693 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தட்டிக்கொண்டதுடன் சம்பியன் கிண்ணத்தையும் சுவீகரித்துக்கொண்டது.

நிவேதிதா இல்லம் 674 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், அபவாமினி இல்லம் 597  புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .