2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

இரு மாதங்களாகியும் மீனவர்கள் கரை திரும்பவில்லை

Editorial   / 2021 நவம்பர் 24 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனையில் இருந்து செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நால்வர், இரு மாதங்களாகியும் இதுவரை கரை திரும்பவில்லை என்றும், அவர்களை மீட்டுத் தருமாறும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஓட்டமாவடி, பாலைநகர் கிராமத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மீனவர்களின் உறவினர்கள் மேற்படி வேண்டுகோள் விடுத்தனர்.

ஏ.எம்.றியாழ் (வயது 19), எம்.வி.ரிஸ்கான் (வயது 21), மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஹைதர் (வயது 41) மற்றும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம்.எச்.முஹம்மட் கலீல் (வயது 49) ஆகிய வாழைச்சேனையைச் சேர்ந்த மீனவர்களே இன்று வரை கரை திரும்பவில்லை.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுறைகத்துக்கு கடந்த மாதம் வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடலுக்குச் சென்றவர்கள் அந்தமான் தீவில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அவர்களை மிக விரைவில் மீட்டுத் தருவதாகவும் உறுதியளித்துச் சென்றும் இன்றுவரை அவர்கள் வரவில்லை என்றும், உறவினர்கள் தெரிவித்தனர்.

எங்களுக்கு கடற்றொழில் அமைச்சர், கடற்றொழில் திணைக்களம், பிரதேச மீனவ சங்கங்கள் உரிய நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத் தருவதில் அசமந்தப்போக்காக உள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.

அந்தமான்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்கள் தற்போது எங்கே? அந்தமான்தீவு கடல் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்கள் அங்கிருந்து படகுடன் எங்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பில் மீனவர்கள் உள்ளனர் என்றும், பிறகு மீனவர்களின் தகவல் கிடைக்கவில்லை என்றும் அரசாங்கம் எங்களை ஏமாற்றுகின்றதா? அல்லது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் கரிசனை கொள்ளாமல் உள்ளாரா? என்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X