2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

‘மண் காசு தானே வாங்க போனவர்’: சகோதரி கதறல்

Editorial   / 2021 ஜூன் 22 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தவறுதலாக சுட்டிருந்தாலும் பரவாயில்லை; கையை விசுக்கி கூப்பிட்டு, வேண்டுமென்றே சுட்டு எனது சகோதரனை கொன்றுவிட்டனர் என, இராஜாங்க அமைச்சர் எஸ்.வி​யாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் சகோதரி கதறியழுந்தார்.

சம்பவம் தொடர்பில் தெரிவித்த அவர்,

இரண்டொரு நாள்களுக்கு முன்னர், மண் ஏற்றிச்சென்று வீடொன்றுக்கு கொட்டிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மெய்ப்பாதுகாவலர், தாங்கள் போகவேண்டும், லொறியை எடுக்குமாறு கேட்டுள்ளார். கொஞ்சம் இருங்கோ, மண்ணை இறக்கிவிட்டு செல்கின்றோம் என எனது சகோதரர்  தெரிவித்துள்ளார்.

அப்போது டயரை வெட்டி போட்டுவிட்டனர். ஆனால், என் சகோதரர்  திரும்பிவிட்டார். இறக்கிய மண்ணுக்கான காசை வாங்கதான், சென்றார். அதற்கிடையில், கையை விசுக்கி கூப்பிட்டு என் சகோதரனை சுட்டுக்கொன்றுவிட்டார் என கதறியழுதார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .