2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

நெற் களஞ்சியசாலை சேதம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட தும்பங்கேணியில்  அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான நெற் களஞ்சியசாலையை காட்டு யானை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்கி உடைத்துள்ளது.
 
இந்த நெற்களஞ்சியசாலையில் 450 மெற்றிக்தொன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் புகுந்த தனியன் காட்டுயானை ஒன்று சுற்று வேலியை உடைத்துள்ளதுடன் நெற்களஞ்சியசாலையின் கதவையும் உடைத்து நெல்மூட்டைகளை இழுத்துச் சென்றுள்ளதாக அதன் காவலாளி தெரிவித்தார்.
 
இதனால், சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் மற்றும் தமது தலைமைக் காரியாலயத்துக்கும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளருக்கும் முறையிட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செ.சஞ்ஜீவ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .