Menaka Mookandi / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டின்ழுப்புதல் தொடர்பான அரசசார்பற்ற நிறுவனங்களுடனான மீளாய்வுக்கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், ஐக்கிய நாடுகளின் பிரதி நிதி ரஹ்மான், மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர்கள் அதிகாரிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தலி; மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளங்களைப் புனரமைத்தல், விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கல், குடிநீர் வினியோகம், வடிகாலமைப்பு பாலங்கள் வீதிகள் அமைத்தல் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
சுமார் 3 மணி நேரத்துக்கு நடைபெற்ற இக்கூட்டத்தில், பல் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் பல லட்சம் பெறுமதியான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒப்புக் கொண்டதாகவும் இன்றைய கூட்டம் திருப்திகரமாக நிறைவு பெற்றதாகவும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago