Freelancer / 2023 மார்ச் 30 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று (30) மாபெரும் எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றது.
வவுனியா -நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பி்ரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத்தழிக்கப்பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருந்தது.
குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்ப்பாட்டில் குறித்த எதிர்ப்புப்பேரணி இடம்பெற்றது
இன்று காலை 9.30க்கு வவுனியா கந்தசாமி ஆலயவளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, மணிக்கூட்டு சந்தியை அடைந்து கடைவீதி வழியாக வவுனியா மாவட்டச் செயலகம் வரை சென்றடைந்தது. அங்கு மாவட்டச் செயலருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகைதந்திருந்ததுடன், பொதுஅமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப்பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்கலைகழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
காணாமல்போன உறவுகளின் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (N)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026