2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறை சாலை ஊழியர்கள் போராட்டம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். தில்லைநாதன் 

தனியார் வாகனத்தை ஓட்டிவிட்டு , சாலையில் மாத வருமானம் எடுக்கும் ஊழியர் ஒருவரை சாலையை விட்டு அகற்ற வேண்டும் என கோரி, இ.போ.சபை பருத்தித்துறை சாலையின் ஊழியர்கள்  சிலர், இன்று (05) கவனயீர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 பருத்தித்துறை சாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர், தனியார் வாகனங்களை ஓட்டி வருமானம் பெறுவதாகவும் அத்துடன் சாலையிலிருந்தும் மாத வருமானத்தை பெற்று வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அவர், ஊழியர்களின் நலனையோ, சாலையின் முன்னேற்றத்திலோ பங்கு கொள்ளாமல்  செயற்படுகின்றார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .