2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

குளப்பிட்டி சந்தி புடவைக் கடைக்கு தீ வைப்பு

Niroshini   / 2021 ஜூலை 22 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ் நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, கொக்குவில், குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள புடவைக்கடை ஒன்று இனந்தெரியாத கும்பலால் தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதிடன், கடை உரிமையாளரின் மனைவி மீது வாள் வெட்டு தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது. 

நேற்றிரவு கடையை பூட்டுவதற்கான ஆயத்தங்களை செய்யும் முகமாக கடைக்கு முன்பாக இருந்த பொருள்களைப் பின்புறத்தில்  கடை உரிமையாளரும் அவரது தம்பியும் வைத்துக்கொண்டிருந்த வேளையில் உரிமையாளரின் மனைவி கடையின் முன் பக்கம் நின்றுள்ளார். 

இதன்போது,   இனந்தெரியாத கும்பல் ஒன்று, கடைக்குள் பெற்றோல் குண்டுகளை வீசி  கடைக்கு தீ வைத்தது. அதனை தடுக்க முற்பட்ட உரிமையாளரின் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தது. 

குறித்த பெண்  அவ்விடத்திலிருந்து தப்பி கடைக்கு பின்புறமாக ஓடியுள்ளார். சத்தம் கேட்டு உரிமையாளரும் அவரது தம்பியும் முன்பக்கம் வந்த போது, அந்தக் கும்பல் கடையை தீ மூட்டி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது. 

இருப்பினும், தெய்வாதீனமாக குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார்.

கடைக்குள் ஏற்பட்ட தீப் பரவலை அணைக்க முற்பட்ட வேளை கடை உரிமையாளருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இச்சம்பவத்தை அடுத்து, அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .