2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

பஸ்ஸுடன் மோதி வயோதிபர் பலி

Niroshini   / 2021 ஜூன் 09 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - மட்டுவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில், இன்று (09) மாலை 5 மணியளவில், கொவிட் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை மையத்துக்கு ஏற்றி வந்த பஸ்ஸுடன் மோதி 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, குறித்த பஸ்ஸுக்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், பஸ் பாதுகாப்புக்காக பயணித்த இராணுவத்தினர், கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.

இதையடுத்து, இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், கற்கள் எறிந்த குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

தென்னிலங்கையிலிருந்து 5 பஸ்களில்; கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன்போது, குறித்த வயோதிபர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்து போது, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
 
விபத்தை அடுத்து, சுயநினைவற்ற நிலையில், குறித்த வயோதிபர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .