2025 ஜூலை 19, சனிக்கிழமை

யாழ் வீரகாளி அம்மன் மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு உத்தரவு

Freelancer   / 2023 ஜூன் 10 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் தடைப்பட்ட மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக நேற்று(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. 

குறித்த ஆலயத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில், இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென இரண்டு பூசர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந் நிலையில் மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் நடத்துமாறு கடந்த 6ஆம் திகதி யாழ். மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எனினும் மகோற்சவ முன்னேற்பாட்டினை மேற்கொள்ள முயன்றபோது மற்றைய பூசகர் ஆலயத் திறப்பினை கையளிக்காததால் முரண்பாடு நிலவியது. 

யாழ்ப்பாணப் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முற்படும்துமாறும் நீதவானால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனடிப்படையில் ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X