2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

'யாழ். குடா நாட்டில் இரவு 9 மணிக்கு பின்னரும் வீதி சோதனை நடவடிக்கை'

Super User   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடா நாட்டில் இராணுவத்தினரது வீதி சோதனை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் இரவு 9 மணிக்கு பின்னரும் நீடிப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல தரப்பினராலும் இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே யாழ். குடா நாட்டில் இரவு 9 மணிக்கு பின்னரும் இராணுவத்தினரது சோதனை நடவடிக்கைதொடரும் என அவர் அறிவித்துள்ளார். 
 
இதுவரை காலமும் இரவு 6 மணி முதல் இரவு 8 மணி வரையே இராணுவத்தினரது வீதி சோதனைகள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .