2021 ஜூலை 28, புதன்கிழமை

கைவிடப்பட்ட சமாதான பாதயாத்திரை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

நல்லிணக்கத்திற்கான வடக்கு, கிழக்கு சர்வமத ஒன்றியத்தால் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவிருந்த சமாதான பாதயாத்திரை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.

பிற்பகல் 2.00 மணியளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள  வைரவர் கோவிலிருந்து, காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டறவுச்சங்க மண்டபம் வரை இச்சமாதான பாதயாத்திரை நடைபெறவிருந்தது.

உரியவர்களினுடைய அனுமதி கிடைக்காமையாலேயே இச்சமாதான பாதயாத்திரை கைவிடப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .