Princiya Dixci / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் விசானி தேனவது உத்தரவிட்டார்.
கல்மெட்டியாவ, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நப,ர் அதே பகுதியிலுள்ள மேற்படி சிறுமியை காதலித்து வந்துள்ளதோடு, திருமணம் செய்வதாகக் கூறி பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
சந்தேகநபர் தொடர்பாக சிறுமியின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரைக் கைது செய்துள்ளதாகவும் சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று (13) ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தம்பலாகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026