Nirosh / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகளில் கைகளை கழுவுவதற்கு செனிடைசர் திரவங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 ஈரான் கைதிகளில் தொற்றுநீக்கி திரவத்தை (செனிடைசரை) அருந்தியதில் இருவர் அண்மையில் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து சிறைச்சாலைகளில் செனிடைசர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சிறைச்சாலைகளை கைகளை கழுவுவதற்காக செனிடைசர்கள் இனி வழங்கப்படாது எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதோடு, அதற்குப் பதிலாக சவர்க்காரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கைதிகள் பார்வையாளர்களிடமிருந்து செனிடைசர்களை பெற அனுமதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் வாரத்தில் ஒருதடவை சிறைச்சாலை வார்ட்களை சுத்தம் செய்வதற்காக தொற்றுநீக்கி திரவத்தைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025