Niroshini / 2018 மார்ச் 23 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய சுகாதார அமைச்சின் மூலமாகவே முஸ்லிம் வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள கருத்தை நான் கவனத்தில் கொண்டுள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இந்த விடயத்தை நான் நிச்சயமாக அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டுவருவேன் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி கே.கோடீஸ்வரன், கிழக்கு மாகாணத்தின் தமிழ் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு உரையாற்றிக்கொண்டிருந்தார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி கருத்துரைக்கையிலேயே , அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறுகின்றீர்கள், இதில் உண்மை இருக்கலாம். ஆனால் சமீப காலமாகவே உங்களின் கூட்டாட்சியே இடம்பெற்று வருகின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து நீங்கள் ஆட்சி புரிந்து வருகின்றீர்கள். ஆகவே இதனை நீங்கள் மனதில் கொண்டு கருத்துகளை முன்வைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
இதன் போது குறுக்கிட்ட கே. கோடிஸ்வரன் எம்.பி,
“கிழக்கு மாகாணத்தில் எமது கூட்டு ஆட்சி இருந்தாலும் இவை மத்திய அரசாங்கதின் செயற்பாட்டின் கீழ் உள்ளடக்கப்பட்ட ஒரு வைத்தியசாலையாகும். நான் கூறும் விடயம் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் உள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் மூலமாகவே முஸ்லிம் வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் என்ற வகையில் நீங்களும் இந்த உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும். எமக்கு நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் ”எனக் குறிப்பிட்டார்.
மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்துகளை முன்வைத்த அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில்,
“உங்களின் கருத்தை நான் கவனத்தில் கொண்டுள்ளேன். நிச்சயமாக நான் அமைச்சரவையில் இந்த விடயம் குறித்து கவனத்துக்குக் கொண்டுவருவேன். உங்களின் கட்சி எமக்கு எப்போதும் ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டுள்ளது” என்றார்.
47 minute ago
2 hours ago
4 hours ago
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
4 hours ago
07 Dec 2025