Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் விவகாரம் மற்றும் நியூ போட்ரஸ் நிறுவனத்துடனான திரவ எரிவாயு விநியோக ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி மறுக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹோமாகமயில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகவியலாளர்களிடம்
கருத்துத் தெரிவித்த போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.
11 கட்சிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அந்தந்த அதிகாரிகளுக்கு
ஜனாதிபதியால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த கலந்துரையாடல் தொழில்நுட்ப
விவாதமாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைதரசன் உரம் தொடர்பில்
வினவியபோது, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதே இந்த சமயத்தில் அவசியம் என்றார்.
நனோ தொழிநுட்பத்திலிருந்து வரும் உரங்கள் சமீபத்திய விஞ்ஞான முறையாகும்
என்றும் இது அடிப்படையில் தேவையான உறுப்புகளின் துகள்களைச் சேர்த்து, இது
ஓர் அறிவியல் சமன்பாட்டால் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த நேரத்தில் விவசாய சமூகம் பயிர் செய்ய ஏதாவது தீர்வு காணப்பட்டால் நல்லது என்றும் அதுதான் தேவை என்றும் குறிப்பிட்டார். அரிசி மற்றும் சீனி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது என்று வினவியதற்கு, அதுதான் சந்தை நிலவரம் என்றும் அவை ஏறி இறங்கும் என்றும் தெரிவித்தார்.
6 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025