Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிலையில், புதிய ஜனாதிபதிக்கு தூதுவர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிற்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ, அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் அன்ரனி ரென்சுலி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதுடன், இருதரப்பினரும் இதன்போது சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதனிடையே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா, இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் டொஷிஹிரோ கிதமுரா மற்றும் பிரதி செயலாளர் தகேஷி ஒஷகி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026