Freelancer / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேஸ்புக்கில் அறிமுகமாகிய மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் பண மோசடி செய்த வெளிநாட்டு பிரஜையொருவர்,பொலிஸ் கணினிக் குற்றப் பிரிவினரால் நுகேகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
லெசதோ நாட்டைச் சேர்ந்த 23 வயதான இளைஞரால், வெளிநாட்டிலிருந்து ஒரு டொலர் பொதியை பெற்றவுள்ளதாகத் தெரிவித்து, புகார் அளித்த பெண்ணிடமிருந்து ஒரு இலட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மோசடியாகப் பெறப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேகநபர் தன்னை பேஸ்புக் மூலம் கல்கிஸ்ஸையில் ஒரு ஜவுளி தொழிலதிபராக காட்டிக்கொண்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அந்நியர்களுடன் சமூக ஊடகங்களில் பழகும் போது, பல்வேறு கவர்ச்சிகரமான ஆலோசனைகளை பெற முடியும் என்றும், புத்திசாலித்தனமாக செயல்படவில்லை என்றால் ஏமாற்றத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
10 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago