2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

ஒன்லைன் ஊடாக மதுபானம் வாங்கலாமா?

Editorial   / 2021 ஜூன் 14 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் முறைமையின் ஊடாக, பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை கொள்வனவு செய்யலாம் என்றொரு செய்தி உலாவுகிறது.

  ஒன்லைன் முறைமையின் ஊடாக பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை கொள்வனவு செய்யலாமென வெளியாகியிருக்கும் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லையென கலால் திணைக்களத்தின் முக்கியஸ் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை, கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்ஹவும் உறுதிப்படுத்தினார்.

எனினும், ஒன்லைன் முறைமையின் ஊடாக ​மதுபானங்களை விற்​பனை செய்வதற்கான அனுமதியை பல்பொருள் அங்காடிகளுக்கு பெற்றுதருமாறு சில பல்பொருள் அங்காடிகளின் ஊடாக, கலால் திணைக்களத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .