2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

இலங்கை தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை

Freelancer   / 2021 ஜூலை 24 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள், இலங்கை தமிழ் அகதிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார். 

அப்போது, “தலைநிமிரும் தமிழகம்” என்ற திட்டப்படி, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார். R 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .