2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

‘மகளின் சடலத்தை தோண்டி எடுங்கள்’: மன்றாடினார் தாய்

Editorial   / 2021 ஜூலை 26 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய மகளின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் இன்னுமே தீர்க்கப்படவில்லையென தெரிவித்த டயகம சிறுமியான ஹிஷாலியின் தாய் ரஞ்ஜனி, மகளின் சடலத்தை தோண்டியெடுத்து மீளவும் பரிசோதனை செய்யுமாறு ​மன்றாடினார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால், ஹிஷாலியின் பெற்றோர் கொழும்புக்கு இன்று (26) அழைத்துவரப்பட்டனர். அவர்கள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் செய்தனர். அதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டிலிருக்கும்  சமையலறைக்கு பின்புறத்தில், மின்சாரம் இல்லாத நாய் கூட்டை போன்றதோர் இடத்திலேயே தனது மகள் தங்க வைக்கப்பட்டிருந்துள்ளார். எனது மகளுக்கு என்னமோ நடந்துள்ளது. அவள் சாகவில்லை, கொன்றுவிட்டனர். ஆகையால், சடலத்தை ​மீண்டும் தோண்டியெடுத்து, மரண பரிசோ​தனை செய்யுங்கள் என மன்றாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .