Freelancer / 2022 ஜூலை 06 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமே காரணம் என்றும் அவர் பதவி விலகவேண்டும் என்றும் கோரி, இன்றையதினம் காலை ஹிருணிக்காவுடன் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யுத்த வீரனான கோட்டாவை வெளியே வரச் சொல்லுமாறு கோஷமிட்ட ஹிருணிக்கா, பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி வரை ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே தாம் தங்கியிருக்கப்போவதாக ஹிருணிக்கா தெரிவித்தார்.
இதனையடுத்து கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹிருணிக்கா உட்பட குழுவினர் பொலிஸ் பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிக்கைக்கு தடைகளை மீறி செல்ல முயற்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது செத்தம் வீதியில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
8 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago
27 Oct 2025
27 Oct 2025