2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

‘உண்மையான கொரோனா தகவல்களை அரசாங்கம் மறைக்கிறது’

Nirosh   / 2021 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான உண்மையான தகவல்கள் வெளிவரும்போது, புதிய சட்ட, ஒழுங்கு விதிகளை அமல்படுத்தி அவற்றை அரசாங்கம் மறைப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் குற்றஞ்சுமத்தினார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (05) அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சட்டத்திட்டங்களை அமுல்படுத்தி கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான தகவல்களை மறைக்க வேண்டாமெனவும், நாடு முகங்கொடுத்திருக்கும் இவ்வாறான நிலைமையில் நாட்டு மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும். அரசாங்கம் இதுபோன்ற நிலைமைகளில் உண்மைகளை மறைப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்யும் தவறு எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .