2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இரு மனுக்களும் மே 22 இல் பரிசீலனை

Freelancer   / 2023 மார்ச் 31 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயற்படுத்தத் தவறிய நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தியும் அவருக்கு
தண்டனை வழங்குமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை மே மாதம் பரிசீலனைக்கு
எடுத்துக்கொள்வதற்காக உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை (30) ஒத்திவைத்தது.
 
 திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும
பண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர்
நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை கடந்த 21ஆம் திகதி தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக
அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர்
அடங்கிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதன்போது, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் நீதிமன்றத்தில் உண்மைகளை
முன்வைத்ததுடன், மனுக்கள் குறித்த பல ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் கால
அவகாசம் கோரினார். அதனையடுத்தே மேற்குறிப்பிட்ட பரிசீலனைத் திகதி அறிவிக்கபபட்டது.

உள்ளூராட்சி மன்ற்த தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்
திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின்
செயலாளருக்கு உயர் நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
நிதியமைச்சின் செயலாளர் இடைக்கால உத்தரவை பின்பற்றாமல் நீதிமன்றத்தை
அவமதித்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்பின் 105(3) பிரிவின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக திறைசேரி
செயலாளர் மஹிந்த சிறிவர்தன மீது குற்றம் சுமத்த உத்தரவிடுமாறு மத்தும பண்டார மற்றும்
விஜித ஹேரத் ஆகியோர் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X