2025 ஜூலை 12, சனிக்கிழமை

மூன்று வருடங்களின் பின்னர் ஹஜ் குழு ஜித்தா பயணம்

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மூன்று வருடங்களின் பின்னர், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கை முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

சுற்றாடல்துறை அமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தலைமையிலான ஹஜ் குழுவினர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஜித்தா ஞாயிற்றுக்கிழமை (03) புறப்பட்டுள்னர். ஜித்தா சென்ற ஹஜ் குழுவினரை தூதுவர் ஹம்ஸா வரவேற்றுள்ளார்.

இக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல், முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் இப்றாஹிம் சாஹிப் அன்ஸார், ஹஜ்குழுத் தலைவர் அஹ்காம் உவைஸ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கும், உலக முஸ்லிம்கள் பரந்தளவில் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் இலங்கை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .