2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

பாரிய வைரஸ் நாட்டுக்குள் புகுந்துள்ளது

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் வந்துள்ளது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதென தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அந்த பாரிய வைரஸ் தான் நாட்டிலுள்ள தலைமைத்துவம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

நேற்று(20) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
மக்களை பாதுகாக்க தான் உலக நாடுகள் தடுப்பூசி ஏற்றும் நிலையில், எமது நாட்டில்
அரசாங்கத்தைப் பாதுகாக்கவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த வைரஸை இல்லாமல் செய்ய தான் நாம் செயற்படுகிறோம். இந்த
வாரம் அதற்கான நடவடிக்கையை முன்னடுக்கவுள்ளாம். அதற்கமைய, நாட்டுக்குள் வந்துள்ள
வைரஸ்கள் ஒவ்வொன்றாக இல்லாமல் செய்ய போகிறோம் என்றார்.

இலங்கை மத்திய வங்கியில் ஏற்பட்டுள்ள வைரஸ், கொமிஸ் வைரஸ், யானை வர்த்தக வைரஸ் ,
உரத்தால் ஏற்பட்டுள்ள வைரஸ் இவை எல்லாவற்றிலும் ஊடாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள வைரஸ்
பாரதூரமானது.

இலங்கைக்கு வந்துள்ள சகல வைரஸ்களும் வெளிநாடுகளிலிருந்தே வந்துள்ளன என்பதை
மீண்டும் மீண்டும் நினைவு கூறுவதாகத் தெரிவித்த அவர், நிதியமைச்சர், ஜனாதிபதி மற்றும்
கொரோனாவும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ள வைரஸ்களாகும். இவை அனைத்தும் ஒரே
மாதிரியான வைரஸ் தான் என்றார்.

இன்று நாட்டில் உண்மையில் இந்த அரசாங்கத்தை வழிநடத்துவது யாரென தெரியவில்லை.
அதைவிட இந்த நாட்டை வழிநடத்துவது யாரென தெரியவில்லை. சில வேளைகளில் யார் தீர்மானங்கள் எடுக்கிறார்கள் என சுகாதாரப் பிரிவினருக்கோ பாதுகாப்பு தரப்பினருக்கோத தெரியவில்லை. இன்று வரை மதுபானசாலைகளை திறக்க அனுமதி
வழங்கியது யாரென தெரியவில்லை.

அமைச்சரவையின் அமைச்சரான நாமல் கூட சொல்கிறார் தனக்கும் தெரியவில்லை என கூறுவதாக ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .