2021 ஜூலை 31, சனிக்கிழமை

விளம்பரப் பதாகை ஆர்ப்பாட்டக்காரர் இறக்கப்பட்டார்

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகிலுள்ள விளம்பரப் பதாகை மீதேறி நின்று இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் நடத்திய நபர் சற்றுமுன் தீயணைப்புத் துறையினரால் கீழே இறக்கப்பட்டார்.

தீயணைப்பு இயந்திர பாரமுயர்த்தியொன்று அந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு நபர் மூலம் ஆர்ப்பாட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் அவர் அமைதியாக கீழே இறக்கப்பட்டார்.

தனது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அல்லது அரசாங்க உயர் மட்டத்தினர் தன்னை வந்து சந்தித்து பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளிக்காவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .