2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

அமைச்சு பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பிணை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

கொழும்பு இரவு காரோட்டப் பந்தயத்தின் போது நுழைவுச்சீட்டின்றி நுழைய முயற்சித்து கடமையிலிருந்த பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த அமைச்சு பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மேற்படி காரோட்டப் பந்தயத்தின் போது இடையூறு விளைவித்த மேற்படி இரு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இவர்களை தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்ன அனுமதி வழங்கினார்.

மேற்படி இருவரும் நுழைவுச்சீட்டின்றி வந்ததை அடுத்து அவர்களை பந்தயம் இடம்பெறும் இடத்துக்குச் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால், கடமையிலிருந்த பொலிஸார் மீது இவ்விருவரும் கற்களை வீசி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், சட்ட மருத்துவரின் மதுபோதைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதை அடுத்து அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே, இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .