2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

வில்பத்துவின் வருமானம் 5 கோடி ரூபாய்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 22 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து தேசிய வனப்பூங்காவை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகளால் கடந்த வருடம் 57,650,034 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக குறித்த பூங்காவின் பொறுப்பதிகாரி சமத் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட கடும் வரட்சியையும் பொருட்படுத்தாது 49,114 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 26,612 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வில்பத்து தேசிய வனத்தைப் பார்வையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் கடந்தாண்டு ஜுலை மாதத்தில் 12,131,219 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இதற்கமைய கடந்தாண்டின் மொத்த வருமானம் 57,650,034 ரூபாய் என்றும் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .