Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோபிப்பது போல் நடிப்பது வெகு கஷ்டமானதாகும். ஆனால் நிஜத்தில் கோபிப்பது சுலபமானது. ஏனெனில் ஆத்திரப்படுவது உடனே நிகழ்ந்து விடுகிறது.
எம்மில் பலர் அதனை விரும்புகின்றார்கள். தங்களது கோபங்களுக்கு தம்மை சுற்றியுள்ளவர்கள் பயப்பட்டே ஆக வேண்டுமென இத்தகையவர்கள் விரும்புகின்றனர்.
கண்டப்படி கோபப்படுபவன் ஒருவகையில் கோமாளியாகுகின்றான். கோமாளி சிரிப்பூட்ட கோபம் போல் தன்னை காட்டி நகைப்பூட்டுகிறான்.
சினத்தை காட்டுவது கூட முட்டாள்தனம் தான். மிரட்டுவதற்கான வழி என எண்ணுவது கூட நகைப்பூட்டும் செயல் தான். கோபமே வடிவானால் அவரிடமிருந்து கடிதென விலகுவதே அவருக்கான பதிலடியாகும்.
ஒருவரின் சுயகௌரவத்தை நசுக்க, கோபத்தைக் காட்டுவது அநாகரிகம்.
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025