2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

’சிங்கராஜா வனம்’

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட, மிகப் பெரிய தேசிய வனமாகும். இது இலங்கையின் சப்ரகமுவ, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது.

சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீற்றர் தொடக்கம் 1170 மீற்றர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உள்ளாசப் பிரயாணிகளிடையே மிக பிரசித்தமான தளங்களில் ஒன்றாகும்.

இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. அத்துடன்  ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 ஆம் திகதி, இலங்கையின் தேசிய உரிமை காடாக இது அறிவிக்கப்பட்டது.

இது இலங்கையின் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளதுடன், சிங்கராஜா வனப்பகுதியில், ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 23.6 செல்சியஸ் ஆகும். மே மாதம் தொடக்கம் ஜுலை வரை தென்மேற்குப் பருவக் காற்று மூலமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக் காற்று மூலமும் இக்காடு மழையைப் பெறுகின்றது. ஆண்டுக்கு சராசரியாக 2500 மில்லிமீற்றர் மழை இங்கே பொழிகின்றது.

இவ்வனப்பகுதியை பார்வையிடுவதற்காக வருகை தரும் உள்ளூர் மற்றும் ​வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .