2023 ஜூன் 07, புதன்கிழமை

தென்மராட்சியின் அழகிய கடல்நீரேரி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் உள்ளன. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் உள்ளது.

இக்கடல்நீரேரி 'சேத்துக்கடல்' எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லலாம். அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வழியும் இந்த கடல்நீரேரியில் காணப்படுகின்றன. இங்கு கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, பூநகரி, போன்ற இடங்களைச் சேந்தவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடுகிறார்கள்.

யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலை ஆனையிறவுப் பகுதியில் பூட்டப்பட்ட பின், இந்த கடல் நீரேரியே தென் இலங்கைக்கான போக்குவரத்துப் பாதையாக அமைந்திருந்தது. ஈழப்போராட்ட வரலாற்றில் இக்கடல்நீரேரி பெரும் பங்கு வகித்ததேன்றே சொல்லலாம். 1990 இருந்து 1995 வரை யாழ்ப்பாணத்து மக்கள் தென்னிலங்கை செல்வது என்றால் இதன் ஊடாகத்தான் பூநகரி நல்லூர் என்னும் இடத்துக்கு சென்று, அதில் இருந்து பரந்தன் வழியாக ஏ9 நெடுஞ்சாலையை அடைந்து தென்னிலங்கைக்குச் செல்வார்கள்.

இந்தக் கடல் நீரேரியின் அதிகூடிய ஆழம் நான்கு மீட்டர்கள். இப்பகுதி 'கிளாலி' என்று அழைக்கப்படும். கச்சாய் பகுதியில் இருக்கும் இந்த கடல் நீரேரியின் ஆழம் பொதுவாக ஒரு மீட்டர் இருக்கும்.

கச்சாய் துறைமுகத்திலிருந்த நான்கு கிலோமீற்றர் தென்கிழக்கு திசை, அதிலிருந்து நான்கு கிலோமீற்றர் தெற்கு திசை, அதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக தென்மேற்கு திசை பதினெட்டு கிலோமீற்றர் சென்றால் பாக்குநீரினையில் இணையலாம்.


You May Also Like

  Comments - 0

 • மு.ப.கரிகாலன் Wednesday, 27 January 2016 06:55 AM

  இன்னும் ஈழத்தில் இதுபோல் அற்புதமான இயற்கை காட்சிகள் மலிந்து கிடக்கின்றன.அவைகளையும் படம் பிடித்து இந்த பகுதியை அலங்கரியுங்கள்.நன்றி.

  Reply : 0       0

  Mary Joe Sunday, 28 February 2016 11:58 PM

  This place should be introduced to Ministry of Tourism in order to bring tourists.

  Reply : 0       0

  Mary Joe Sunday, 28 February 2016 11:59 PM

  This place should be introduced to Minis Tourism

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .