2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

40 இலட்சம் பெண்கள் பொங்கலிட்டு கின்னஸ் சாதனை

Kogilavani   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களின் சபரிமலை என வர்ணிக்கப்படும் இந்தியாவின் கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் ஆலயத்தின் பொங்காலை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு 40 லட்சம் பெண்கள் திரண்டு பொங்கல் வைத்து, கின்னஸ் சாதனை படைத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் இவ்விழாவில் இலட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வது வழக்கம். 'திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்' என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால், ஆண்டுக்கு ஆண்டு பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்தாண்டு, 30 இலட்சம் பெண்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து வழிபட்டு, கின்னஸ் சாதனை படைத்தனர். அந்த சாதனையை முறியடித்து, 40 லட்சம் பெண்கள் இந்தாண்டு பங்கேற்று வழிபட்டனர்.

கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 6 கி.மீ. தூரம் கடலென குவிந்திருந்த பெண்கள் தங்கள் அடுப்பில் தீ மூட்டி, பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த பெண்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெற்றது.

200 க்கும் மேற்பட்ட நம்பூதிரிகள் வீதியெங்கும் வைக்கப்பட்டிருந்த பொங்கலில் தீர்த்தம் தெளித்தனர். அதன் பின்னர் பக்தர்கள் பொங்கல் பிரசாதத்தை, உறவினர்களுக்கு கொடுத்து, தாங்களும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X