Yuganthini / 2017 ஜூலை 18 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது.
இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த 6 மாதக் காலப்பகுதியில் எமது அண்டை நாடான இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி இந்தியாவிலிருந்து 1 இலட்சத்து 72 ஆயிரத்து எண்ணூற்றி தொன்னூற்றி நான்கு சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 1 இலட்சத்து 34 ஆயிரத்து எழுநூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாபயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஆனால் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. காரணம் இக்காலப்பகுதில் நாட்டில் டெங்கு தொற்று நோய் அதிகரித்து இருந்தமை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை என, அச்சபை தெரிவித்தது.
இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தரச் செய்வதே எமது இலக்காகும். ஆனால் அந்த இலக்கை அடைவது கஸ்ட்டம் என, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
18 minute ago
07 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
07 Nov 2025