2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

Stamford Star Hotel

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 04 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் எத்தனையோ அழகான இடங்கள் இருந்தாலும், நம்மூரில் இருக்கின்ற அழகினை ரசிப்பதில் இருக்கின்ற சுகமே தனிதான். அப்படி அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் நுவரெலியா.
 
எங்கும் பசுமை விரிந்து கிடக்கின்ற, இயற்கையில் அழகிய படைப்பது. பனி விழும் பொழுதில், பச்சைப் பசேலென்ற அழகிய மலைகளுக்கிடையில் கிடைக்கின்ற மன நிம்மதி, நுவரெலியாவில் மட்டுமே நம்மால் அனுமானிக்க முடியும். 'குட்டி இங்கிலாந்து' என்று செல்லமாக அழைக்கின்ற இயற்கையின் கைக்குழந்தை, நுவரெலியாவில் ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன.
 
பொதுவாக டிசெம்பர் மாதத்தில் நுவரெலியாவில் குளிர் அதிகமாக காணப்படும். ஏப்ரல் மாதத்தினை வசந்தகாலம் என்பார்கள். ஏப்ரல் மாதத்தில் நுவரெலியா மாநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். வசந்தகால நிகழ்வுகள் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருக்கும். இதனை ரசிப்பதற்கு நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
 
பிற இடங்களில் இருக்கின்ற மக்கள், மனதுக்கு சாந்தி வேண்டி நுவரெலியாவுக்கு வருவார்கள். குறிப்பாக பாடசாலை விடுமுறை நாட்களை தமது குழந்தைச் செல்வங்களுடன் களித்திடுவதற்கு நுவரெலியாவை தேர்ந்தெடுப்பார்கள். டிசெம்பர் மாத விடுமுறை என்பது இங்கு மிகவும் விசேடமானது. இயற்கையில் குளிர்மையை இங்கு நன்கு அனுபவிக்க முடியும். 
 
பனி விழும் காலைப் பொழுதில், நுவரெலியாவின் கிரகரி ஆற்றோரமாக நடந்துசெல்லும்போது மனதுக்கு ஏற்படும் சுகத்திற்கு அளவே இருக்காது. இப்படியான இயற்கை அதிசயங்களை ரசிப்பதற்கு, நாம் நுவரெலியா சென்றால் தங்குவதற்கும் நல்ல இடம் தேவை. அந்த ஆசையினை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள் ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டல் (Stamford Star Hotel) உரிமையாளர்கள்.
 
நுவரெலியா மாநகரின், குதிரைப் பந்தய தடாத்கதிற்கு முன்பாக, நுவரெலியா – பதுளை வீதியின் அருகாமையில் அழகிய, கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது இந்த ஹோட்டல். ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலில் மொத்தம் 40 அறைகள் இருக்கின்றன. அத்தனையும், நட்சத்திர விடுதிகளில் காணப்படுகின்ற அறைகளை ஒத்ததாக காணப்படுகின்றன. உயர்தர வசதிகளைக் கொண்ட 40 அறைகளிலிருந்தும் நுவரெலியாவின் அழகினை ரசிக்க முடியும். 
 
வசந்த கால கார்ப்பந்தயம், குதிரைப் பந்தயம் மற்றும் நிகழ்வுகளை முன்பக்க அறைகளின் பல்கனியில் இருந்து அழகாக ரசிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், பின்புற அறைகளினூடாக நுவரெலியாவின் அழகினை ரசிக்க முடியும். அனைத்து அறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி, சுடுதண்ணீர் வசதி காணப்படுகின்றமை சிறப்பானதாகும்.
 
நிஹால் ரத்னாயக்கவின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டலின் பொதுமுகாமையாளராக சாந்த ஹத்தொட்டுவேகம இருக்கின்றார். பல முன்னணி ஹோட்டல்களில் பணிபுரிந்த அனுபவத்தினைக் கொண்டவர் சாந்த ஹத்தொட்டுவேகம. இவரது முகாமைத்துவத்தில் ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டல் இன்னமும் அழகுறுகின்றது. 
 
ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலின் மற்றுமொரு விசேடம், சாப்பாடு. தரமான சமையல் விற்பன்னர்களினால் அனைத்துவிதமான சாப்பாடுகளும் பரிமாறப்படுகின்றன. அனுபவமிக்க, திறமைசாலிகளான சமையற்கலை விற்பன்னர்களை தன்னகத்தே கொண்டிருப்பது ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலுக்கு மேலும் வலுச்சேர்க்கிறது. 
 
அதுமட்டுமல்லாமல் 'மினி பார்' வசதியும் இங்கிருக்கிறது. இந்த பாரில் உட்கார்ந்தும் நுவரெலியாவின் அழகினை ரசிக்க முடியும். அத்தோடு சாப்பாட்டு மண்டபத்தில் இருந்து, இலங்கையில் மிகவுயர்ந்த மலையான பீதுருதாலகால மலையினையும் ரசிக்க முடிகின்றமை மேலும் சிறப்பானதாகும்.
 
இவ்வளவு வசதிகளையும் உள்ளடக்கிய, நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களுக்கு இணையான ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கு பெரும் தொகை பணம் செலவிடத் தேவையில்லை. உங்கள் வசதிக்கேற்ப, மிகக் குறைந்த கட்டணங்களே இங்கு அறவிடப்படுகின்றன. இந்த வசதி, நுவரெலியாவில் வேறு எங்கும் கிடைக்காது என்பதும் சிறப்பானதாகும். 
 
ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலில் நீங்களும் தங்கி, நுவரெலியா மாநகரின் அழகினை ரசிக்க வேண்டுமானால், நீங்கள் கீழுள்ள தொடர்புகளை அணுகுங்கள்.
No.120, Badulla Road, Nuwara-Eliya, Sri Lanka. 
Reservation: 052- 2220550-1 Fax: 052-2220552
Email: fomstamford@sltnet.lk, gmstamford@sltnet.lk
Web: www.stamfordstarhotel.com  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .