2022 ஜூலை 02, சனிக்கிழமை

இறுதிப்போட்டியில் புத்தளம் லிவர்பூல், நாகவில்லு எருக்கலம்பிட்டி

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 24 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகர சபையின் ஏற்பாட்டில் புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் ஒத்துழைப்புடன் புத்தளத்தில் நடாத்தப்பட்டு வந்த கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்டத் தொடரின் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் அண்மையில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றன.

இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் புத்தளம் அல் அஷ்ரக் அணியும், லிவர்பூல் அணியும் பலப்பரீட்சை நடாத்தின. போட்டி ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் அல் அஷ்ரக் அணி வீரர் என்.எம்.நுஸ்கி தனது அணிக்காக முதலாவது கோலைப் பதிவு செய்தார்.

இடைவேளைக்கு பின்னர் போட்டியின் இறுதித் தறுவாயில் 74ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் எம்.எச்.எம். முஸ்தாக் தனது அணிக்காக முதலாவது கோலைப் போட்டதுடன் போட்டி மேலும் விறு விறுப்பாகியது.

போட்டி சம நிலையில் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்பட்ட வேளை 79ஆவது நிமிடத்தில் லிவர்பூலுக்கு கிடைக்கப்பெற்ற தண்ட உதையை லிவர்பூலின் அதி வேக உதை வீரர் எம். முஸக்கீர் கோலாக்கியதன் மூலம் 2-1 எனும் கோல் வித்தியாசத்தில் லிவர்பூல் அணி தனது வெற்றியை உறுதிப்படுத்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

போட்டியின் சிறந்த வீரராக லிவர்பூல் அணியின் எம்.எச்.எம். முஸ்தாக் தெரிவானார்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நாகவில்லு எருக்கலம்பிட்டி அணியும் தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியும் மோதின. போட்டி ஆரம்பித்து 18 வது நிமிடத்தில் நியூ பிரண்ட்ஸ் அணி வீரர் எம்.முபாரிஸ் தனது அணிக்காக கோலைச் செலுத்தினார்.

இடைவேளைக்கு பின்னர் போட்டியின் இறுதித் தறுவாயில் நாகவில்லு எருக்கலம்பிட்டி அணி யினர் தொடர்ந்து இரண்டு கோல்களை புகுத்தியதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் நாகவில்லு எருக்கலம்பிட்டி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. நாகவில்லு எருக்கலம்பிட்டி அணிக்காக எப்.எம்.பஸாம், எம்.பாசில் ஆகியோர் கோல்களைச் செலுத்தியதோடு, போட்டியிம்நாயகனாக அவ்வணியின் கோல் காப்பாளர் எம்.எச்.எம்.அபாஸ் தெரிவானார்.

தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி, புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .