2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

சானுஜனுக்குத் தங்கப் பதக்கம்

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை பாடசாலைகள்  மெய்வல்லுநர் போட்டிகளில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம்  போட்டியில்  யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் சானுஜன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை புரிந்துள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இறுதி நாளான  கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற ஆண்களுக்கான பரிதி வட்டம் போட்டியில்  ஹார்ட்லி கல்லூரியின் வி. சானுஜன் பெற்றுக்கொண்ட தங்கப் பதக்கத்துடன், ஹார்ட்லி கல்லூரி இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநரில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தினை வென்று சாதனை நிலை நாட்டியது.

இதேநேரம், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில்  மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இதில் யாழ். சாவகச்சேரியின் ஏ. புவிதரன் மற்றும் என். டக்சிதா, அளவெட்டி அருணோதயாவின் எம். திசாந்த், தெல்லிப்பழை  மஹஜனாவின் சி. தீபிகா  ஆகியோர் கோலூன்றிப் பாய்தலிலும், பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் எஸ். மிதுன்ராஜ் குண்டடெறிதலிலும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தனர்.

கடந்த வருடம் முதல் தடவையாக அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநரில் களமிறங்கிய சானுஜன் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் மற்றும் பரிதி வட்டம் ஆகிய போட்டிகளில் பங்குபற்றியிருந்தார். எனினும், அவரால் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X