Ilango Bharathy / 2023 மார்ச் 16 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 'ட்ரூகோலர் செயலி' நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளது.
இது குறித்து டெல்லி காவற்துறை சிறப்பு ஆணையர் ‘சஞ்சய் சிங்‘ கூறியதாவது, ”தற்போது இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. அதிலும் தொலைபேசி மூலமாக இணைய வழி மோசடிகள் மிக அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ட்ரூகோலர் செயலியுடன் டெல்லி காவல்துறை கைகோர்த்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் எந்த வித புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை சின்னம் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க சின்னமும் வழங்கப்படும்.
மேலும், தொலைபேசியில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்றார்.
20 minute ago
1 hours ago
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
25 Jan 2026