Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 27 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உப தலைவராகவும், சாய்ந்தமருது ஸகாத் நிதிய தலைவராகவும் நீண்டகாலம் சேவையாற்றிய சாய்ந்தமருதூரின் மூத்த உலமா அல்ஹாஜ் யூ.எல்.எம் காஸிம் மௌலவி சனிக்கிழமை (25) மாலை காலமானார்.
இவர், மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலய பிரதி அதிபராக இருந்து ஓய்வுவுபெற்ற அல்ஹாஜ் யூ.எல்.எம். காஸிம் மௌலவி, பிரதேசத்தின் மார்க்க கல்வியை மேம்படுத்த தஃவா இஸ்லாமிய கலாபீடத்திலும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உபதலைவராகவும் அகில இலங்கை உலமாக்கள் சபை சாய்ந்தமருது கிளையின் தலைவராகவும் செயலாளராகவும் சாய்ந்தமருது ஸகாத் நிதிய தலைவராகவும் சேவையாற்றி, மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில், சாய்ந்தமருது தக்வா மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago