2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

பேராசிரியராக பதவியுயர்வு

Editorial   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான், எஸ்.அஷ்ரப்கான், நூருல் ஹுதா உமர்

தென்கிழக்குப்  பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் எம்.ஏ.எம். பௌசர் பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவர் மிக இளம் வயதில் பேராசிரியராகப் பதவியுயர்வைப் பெற்றுள்ளமை பல்ககைலக்கழக வரலாற்றில் முன்மாதிரியாக அமைகின்றது.

இப்பதவியுயர்வின் மூலம்  கலை கலாசாரப் பீடத்தின் இரண்டு பேராசிரியர்களைக் கொண்ட ஒரேயொரு துறையாக அரசியல் விஞ்ஞானத்துறை திகழ்கின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விசேட கற்கையினைப் பூர்த்தி செய்த பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர், அத்துறையில் முதல் வகுப்புப் பட்டத்தைப் பெற்ற முதலாவது மாணவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

20.11.2020 முதல் அமுலுக்கு வரும் வகையில் இப்பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X