Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா, ஏ.எல்.எம்.ஷினாஸ், பைஷல் இஸ்மாயில், றியாஸ் ஆதம்
பொத்துவில் அரச வைத்தியசாலைக்கு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, நேற்று (26) வழங்கினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்தின் வேண்டுகோளுக்கமைவாக, இம்மருத்துவ உபகரணத் தொகுதி வழங்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், 'விபக்சயே உஸ்மக்' (எதிர்க்கட்சியின் சுவாசம்) எனும் தொனிப்பொருளில், ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இவை வழங்கப்பட்டன.
இந்த வைத்திய உபகரணங்களை, பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் மொஹமட் ரியாஸ்சிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கையளித்தார்.
மேற்படி திட்டத்தின் கீழ், பொத்துவில் ஆதார வைத்தியசாலை 28ஆவது வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025