2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் 30 வயதுக்கு குறைந்த ஒப்பந்த மற்றும் நாளாந்த ஊழியர்களாக கடமையாற்றுபவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி, ஒலுவில் வளாகத்தில் வைத்து இன்று (13) ஏற்றப்பட்டது.

இத்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் காலை 09 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை தடுப்பூசி வழங்கப்படுமென, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

ஏனைய பல்கலைக்கழகங்களில் கடமையாற்றும் 30 வயதுக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்களும், மாணவர்களும் இத்தடுப்பூசி வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மேற்படி வயது பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், ஊழியர்களும் தாங்கள் வசிக்கின்ற பிரதேசத்தை அண்டிய பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில் 15ஆம் திகதி வரை தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .