2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

பாரதியாரின் உருவச்சிலை திறப்பு விழா

Editorial   / 2020 ஜனவரி 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில், 20003ஆம் ஆண்டில் க.பொ.த சாதார தர வகுப்பில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலையொன்றை அமைத்துள்ளனர்.

இந்தத் திருவுருவச் சிலை திறப்பு விழாவும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் தமிழ் பணியைக் கெளரவப்படுத்தும் கலை விழாவும், எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணிக்கு, பாடசாலை அதிபர் ரவிக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, பாரதி கல்லூரியின் நிறுவுநர் பாரதி இராமசாமி கலந்துகொள்ளவுள்ளார்.

கெளரவ அதிதிகளாக, பதுளை வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும் கல்வி உயர் அதிகாரிகளும், பாடசாலையில் கடமையாற்றிய முன்னாள் அதிபர்களும், பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்களும், அருகிலுள்ள பாடசாலை அதிபர்களும், நலன் விரும்பிகளும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .